முதியோர் பேணுக

சருமஞ் சுருங்கி சரீர மொடுங்க
இருவிழிப் பார்வை மறைக்க -கருவண்ணக்
கேசம் நரைத்து வெளுக்க, நடைதளர
பாசத்திற் கேங்கிடும் மூப்பு .

பரிவுகாட்ட ஆளின்றேல் வாடும் முதுமை
பிரிவென்றால் தாங்காது சோரும் -சரிதானே !
மூத்தோரைக் கண்போலக் காத்தல் கடமையன்றோ
நீத்தபின் ஏங்க லிழிவு.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Jun-14, 10:41 am)
பார்வை : 2860

மேலே