இதயம் உனக்குள்ளே

மௌனமாய் கொலைகள் செய்கிறாய்- கண்களில்
உயிரை தின்கிறாய் ..
ஏனடா இது சரியா
வன்முறையிலே இது மென்முறையா ...

நீ பார்க்கிறாய்
மனம் பறக்குது விண்ணிலே
உயிர் கேட்கிறாய்
நீ இருப்பதோ என்னிலே ....

கண்மூடி உறங்கையிலே
கனவிலே மிரட்டுது -உன் குரல்
எனை அன்றி கனவுகள் உனக்கில்லை என்று ..

காற்றிலே மிதந்து வரும் இறகிலே
காதல் கடிதம் அனுப்பினாய் -காற்றதை சேர்க்கவில்லை
காதல் மட்டும் சேர்ந்தது
எனக்குள்ளே நெருப்பாய் ..

இடைவெளி இன்றி நெருக்கமாய் நிற்கிறாய் -என் இதயத்தில் நீ
இரக்கமின்றி என் இரவுகளை கொள்கிறாய் உறக்கமின்றி நான் ....

எழுதியவர் : நிஷா (16-Jun-14, 4:01 pm)
Tanglish : ithayam unakulle
பார்வை : 114

மேலே