அம்மு குட்டி !

அன்றொரு நாள்
அம்மாவின் அடுக்களையில்
காராமணி விதைபானையில்
கைவிட்டேன் முளைக்கவைக்க

சிவப்பும் கருப்பும் வெள்ளையுமாக
சிறந்த விதைகளுக்கிடையில்
சின்ன பொன் மூக்குத்தி

அதையும் சேர்த்து
அப்போதே முளைக்க போட்டேன்
முளைத்ததோ மூன்று இலையாய்
முழுவதுமாக மேய்ந்து விட்டதாம்
என் வீட்டு ஆட்டுக்குட்டி
என் மேலே குதித்து விளையாடியது

ஒரு நாள் என் அப்பா
ஊர் சுற்றி வீடுவந்து
கவலையின்றி குடித்து விட்டு
காட்டுத்தனமாய் அடித்துவிட்டார்
அம்மாவோடு அழுதுகொண்டு
அன்று முழுவதும் அப்படியே இருந்தோம்

மறுநாளில் அப்பனோ
மயக்கம் தெளியாமல் அப்படியே கிடக்க
குளிப்பாட்டி குந்த வைத்தோம்
குமட்டிக்கொண்டு இரத்தவாந்தி எடுத்தார்

மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம்
மருந்து மாத்திரையினால் குணம் கண்டோம்
அரசாங்க மருத்துவமனைக்கு
அலைய வேண்டிய செலவுக்கெல்லாம்
முளைக்கவைக்கும் முயற்சியை சொன்னேன்
முட்டாள் என் குழந்தையல்ல மெச்சிகொன்டாள்

புதைத்துவைத்த மூக்குத்தியெடுத்து
புத்திசாலிதனமாய் விற்று விட்டு
அம்மா அன்று என்னிடம் சொன்னாள்
அப்பா அன்று விதை பானையில்
கைவிட்டு பார்த்ததால் காசில்லாமல் விதையை
கடைசியில் விற்றுவிட்டு குடித்து விட்டார்

நீ புதைத்து வைத்ததால் முளைக்காமல்
நிம்மதியாக வளர்ந்ததே என்ன சொல்வேன்
அப்பா பிழைத்தது உன் செயல்தானே
அப்படியாவது திருந்துவாரா பார்க்கலாம் ?


எழுதியவர் : . ' .கவி (10-Mar-11, 11:00 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 545

மேலே