அவர்களிடம் மட்டும்

ரோட்டோரம் குழந்தைஉடன்
பிச்சை எடுத்து கொண்டிருந்தாள்
ஒருத்தி ..
அவளின் இடுப்பில் இருந்த
குழந்தை தன் அழுகையால்
கேட்டது ..
"நமக்கு தான் கை கால் இருக்கே?"
உணர்ந்த தாய்
"நமக்கு வயிறும் இருக்கே?"
என சொல்லாமல்
ஒரு காரை பார்த்து
" அம்மா .குழந்த பசியில
அழுது ..ஏதாவது .."
என்று தொடர்ந்தாள் ..

இதை கண்ட காருக்குள்
இருந்த குழந்தை
ஒன்றும் அறியாததாய்
தன் தாயிடம் கேட்டது
"அம்மா!அவர்களிடம் மட்டும்
ஏன் பணம் இல்லை ?

யாரும் அறிந்திராத பதில்
அவளிடமும் இல்லை ...


-ஸ்ரீ வேலன் ,

எழுதியவர் : srimathi vadivelan (10-Mar-11, 12:02 pm)
சேர்த்தது : srimathi vadivelan
பார்வை : 378

மேலே