நீயும் இந்திய நாட்டின் அகதிதான்
மாண்டது மனிதத்துவம்
நீண்டது மதத்துவம் !
சரிந்தது சமத்துவம்
வளர்ந்தது சாதித்துவம் !
மதம் பார்த்து நாம்
மாற்றியது என்ன ?
சாதி பார்த்து நாம்
சாதித்தது என்ன ?
அங்கே இனம் அழிந்த போது
இங்கே ஐம்புலம் அடங்கிப் போனதென்ன ?
அங்கே ஆதரவின்றி அகதியாய் வந்தான்
இங்கே ஆதரவு தந்தும்
அகதியாய் வாழ்வதென்ன ?
சிறைக்குள்ளும் முல்வேளிக்குள்ளும் வாழ
பயந்து தானே வந்தான் !
இங்கேயும் சிறைச்சாலையிலும் முகாமிலும்
அடைத்து வைப்பதெனில் !
இரு நாடுகளின் நோக்கமென்ன ?
என் முன்னே என்னினம் வதைபடுவதும் கொள்ளப்படுவதும் ஏன் ?
என்னால் எதையும் தடுக்க முடியாமல்
போனதே காரணம் என்ன ?
நீயும் இந்திய நாட்டின் அகதிதான்
என்பதைதைத் தவிர வேறென்ன ?