செந்தில்குமார் ஜெயக்கொடி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  செந்தில்குமார் ஜெயக்கொடி
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  16-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2011
பார்த்தவர்கள்:  622
புள்ளி:  146

என்னைப் பற்றி...

'அ' வென்று எழுதப்பழகும்
திக்குவாய் பிள்ளை நான் !
எழுதுகோல் இல்லாமல்
சுடும் மணற்பரப்பில்
சுட்டும் விரலால்
என்னவென்றே தெரியாமல்
ஏதேதோ கிறுக்குகிறேன் !
யாரவது இருந்தால் உதவுங்கள்
என் கரம் பிடித்து !

என் படைப்புகள்
செந்தில்குமார் ஜெயக்கொடி செய்திகள்

ஜல்லிக்கட்டு தடை அதை உடை

புது சரித்திரம் படை !

ஆயிரம் ஆண்டு பல ஆயிரம் ஆண்டு

வீர மறவர் விளையாடிய ஆட்டமின்று

வீணர்களின் தடைக்கு அஞ்சாது !

தடை மீற தமிழினம் தயங்காது !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

தொடை தட்டி தோள் உயர்த்தி
நெஞ்சை நிமிர்த்தி நீ ஆடடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

கோழைகளின் கொடுஞ்செயலே தடையடா
கோமக்களே கொடுந்தடையை உடையடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

பைந்தமிழ் பறையனே பறை கொண்டு அடியடா
ஜல்லிக்கட்டு தடைமீர் தமிழா என்றே உரையடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாம

மேலும்

வீரியமான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jan-2016 11:45 pm

தள்ளாடுது தமிழகம் இதுதானோ
தங்கத் தாரகையின் இராஜ்ஜியம்

மது நீரில் பாதி
மழை நீரில் மீதி
மூழ்கித்தான் கண்டோமே பீதி

தாத்தாவும் பாட்டியும்
பட்டபாடு அப்பட்டம்
ஆகித்தான் போனது
ஆனாலும் கை விரல்
தேர்தல்னு வந்துட்டா
சூரியனையோ ரெட்ட
இலையோத் தான் தேடுது

தமிழ் நாடே ரெண்டு வீட்டு சொத்தாச்சு
சொரண்டி சொரண்டி எல்லாத்தையும் வித்தாச்சு
ஆனாலும் நிக்கலையே
மானம் கெட்ட மக்களின்
சொரனகெட்ட வக்காளத்து பேச்சு

அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை
காசு வாங்கிக்குனு
அதிகாரத்தை குத்தகைக்கு விடும்
மக்கள் குத்தமும் மறந்தே போச்சு !

யானை குதிரை எல்லாம் கொண்டு
படையெடுத்து வந்து அடிமையாக்கினால்

மேலும்

ஆதரவிற்கு நன்றி தோழர் .... 30-Nov-2015 10:16 am
சிறப்பு நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 10:15 am

உலகில் இல்லாத கடவுளை
இருப்பதாய் எண்ணிக்கொண்டு
எப்படி பக்த்தன்
பக்தி செலுத்துகிறானோ
அது போலத்தான்
உன்னிடம் இல்லாத காதலை
இருப்பதாய் எண்ணியே
என்னன்பை செலுத்துகிறேன்
காதலிலும் மூடநம்பிக்கை !

மேலும்

இல்லை காதல் அழகான ஆட்சி தரிசனம் பெறத்தான் பல காலம் தேவைப்படும் 30-Nov-2015 10:31 am

காத்திருப்பு !

மேலும்

வாழ்த்துகள்... 01-Dec-2015 10:31 am
காத்திருப்பும் சுகமே!! நொடிக்கு நொடி அவள் முகம் காண ஏங்குவதால் 30-Nov-2015 10:30 am

மாட்டிறைச்சி தின்றாலும் கொலை
விற்றாலும் கொலை

முற்போக்குதனமாய் எழுதினாலும் கொலை
பேசினாலும் கொலை

தாழ்த்தப்பட்டவன் என்றால் கொலை
நீதி கேட்டு நிமிர்ந்தாலும் கொலை

புரட்சிகரமாய் பாடினாலும் கொலையா ?

மது ஒழிப்பு பிரச்சாரப் பாடலை பாடிய
தோழர் கோவன் அவர்கள்
தேச துரோக வழக்கில் கைது

இந்த கைதை ஓர் கொலையாகவே
நான் பார்க்கிறேன்

கோவன் குரலில் என்ன பிழையா ?
கோவன் பாடலில் தான் பிழையா ?
அல்லது ஜனநாயக தோல் போர்த்திக்கொண்டு
சர்வாதிகார ஆட்சியாளர்கள் செய்யும் துரோகத்தை
பாடியது தான் குற்றமா ?

ஜெயாவும் கருணாவும் காங்கிரசும் பாஜகவும்
செய்யாத பிழையையா ? செய்யாத குற்றத்தையா ?
தோழர

மேலும்

காலத்தின் போலியான முகங்கள் 30-Nov-2015 10:28 am

உன்னை ஆழமாக நேசித்தேன்
இறந்து போனேன் !

நீச்சல் தெரியாததால் !!

மேலும்

நன்றி அண்ணா 27-Aug-2015 9:57 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Aug-2015 12:22 am
இதயக் கடலில் மூழ்கிய வரிகள் 26-Aug-2015 11:17 pm

நீங்கள் இறந்து விட்டீரா?
கடல் அலை ஓய்ந்து விட்டது
என்றால் யாராவது நம்புவார்களா?
வற்றாத கடல் அல்லவா நீ
ஓயாத அலையல்லவா உன் இசை!
உனக்கேது மரணம் ?
காலத்தோடு கலந்து வாழ்பவன் நீ
காலத்திற்கு ஏது மரணம் !
இசையாகா வாழ்கிறாய் நீ !
இசைக்கு ஏது மரணம் !
வாழ்ந்தாய் !
வாழ்கிறாய் !
வாழ்வாய் !
மண்ணில் மரணமற்ற மனிதர்கள் சிலரே !
அதிலொ ருவனானாய் நீயின்று !

மேலும்

நன்றி நட்பே 27-Aug-2015 9:56 am
கலைஞன் வாழ்க்கை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் முற்றுப் பெற்று விடாது நல்ல சமர்ப்பணம் 26-Aug-2015 11:21 pm

ஐயம்பு தொடுத்து எனைத்
தாக்கும் தேவதையே
உன் விழி தரும் போதையில்
நான் போகும் வழிமாறிப்போகிறது
சற்று உன் விழிகளை மூடிக்கொள்
என் வழியை பார்த்து
நான் செல்லும் வரை

மேலும்

இப்பாடலை இதுபோல் எழுதினால்: செல்லலை யம்பொழில்சூழ் செந்திலான் அறியா னிறைகை செல்லலை யம்பொழில் எங்கணு மேற்பவென தெறித்த செல்லலை யம்பொழி லங்கைக் கருள்திருமால் நிறம்போல் செல்லலை யம்பொழி லாகவம் மாதுயிர் சேதிப்பதே.----------------கலித்துறை என்று வருகிறது. எந்த இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டதோ? 16-Feb-2015 6:41 pm
தென் தலை அம்பு புனைவார் குமார, திமிர முந்நீர் தென் தலை அம்புய மின் கோ மருக, செழுமறைத் தேர் தென்றலை அம் புசகபூதர, எரிசிந்தி மன்றல் தென்றல் ஐயம்பு படி நெறி போய் உயிர் தீர்க்கின்றதே. 16-Feb-2015 3:01 pm
நன்றி ஐயா .... செல் அலை அம் பொழில் சூழ் செந்திலான் அறியான், இறை கை செல்லல் ஐயம் பொழில் எங்கணும் ஏற்ப என தெறித்த செல்லல் ஐயம் பொழில் லங்கைக்கு அருள் திருமால் நிறம் போல் செல் அல் ஐயம்பு ஒழி லாகவம் மாது உயிர் சேதிப்பதே. 16-Feb-2015 2:56 pm
தகவலுக்கு நன்றி செந்தில்; தங்களின் இலக்கிய அறிவுக்குப் பாராட்டுக்கள்; காமனின் மலர்க்கணை பற்றி முழுவதுமாக அறிந்திலேன்; தங்கள் குறிப்பிலிருந்து ஐந்து மலர்களைத் தொகுத்துக் கட்டிய அம்பு என்று புரிகிறது. ஏதேனும் இலக்கிய எடுத்துக்காட்டுக் கூறமுடிந்தால் இன்னும் அதிக மகிழ்ச்சி கொள்வேன். இதுபோன்ற நல்ல கவிதைகளைத் தொடருங்கள்-பலருக்கும் பயனளிக்கும் வகையில்.... 16-Feb-2015 10:03 am

#காதலர்_தின_கவிதை

#அனைத்து_உண்மையான_காதலர்களுக்கும்_சமர்ப்பணம்

அவன் வருவானா நாளை ?
~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~~~ ~~~~~~ ~~~~~ ~~~~
ஒவ்வொரு நாளும் ஓயாமல்
என்னை பின்தொடர்ந்த காவலன்
கடும் சினம் கொண்டு நான்
முறைத்த போதும் குழந்தை
முகம் கொண்டு சிரித்த குணாளன்
அவன் வருவானா நாளை ?

ஒரு கணம் கூட உன்னை காண முடியாது
என்று சொல்லி புறப்பட்ட பொழுது
ஒவ்வொரு கணமும் உன்னை மட்டுமே
காணத் துடிக்கிறேன் என ஓடிவந்த
அவன் வருவானா நாளை ?

வெறுத்து பேசினேன் விலகி நடந்தேன்
எல்லாம் பொருத்து என்னை இரசித்த
அவன் வருவானா நாளை ?

என் கண்ணில் படும்படி எத்தனையோ
சைகைகள் செய்தான் சாகசங்கள் செய்தான்

மேலும்

நல்ல கவிதை -தொடருங்கள் . 14-Feb-2015 11:10 pm
ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம் :) 13-Feb-2015 10:50 pm
செந்தில்குமார் ஜெயக்கொடி அளித்த படைப்பை (public) மகிழினி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Feb-2015 10:18 am

எழுத்து இணையத்திற்கும், அதில் அற்புதமாய் படைப்புகளை சமைத்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கும், அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, நாடியோ நாடமலோ எதோ ஓர் விதத்தில் இந்த இணையத்தில் வந்து வாசித்துவிட்டு போகும் வாசகர்களுக்கும், வாசகர்கள் போர்வையில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் இந்த சின்னப் பையனின் பெரிய வணக்கம். ஓர் தொடர் கதையை (சிறுகதையா பெருங்கதையா என முடிவு செய்யவில்லை) எனது குட்டி கற்பனை ஆற்றலை கொண்டு எழுத திட்டமிட்டுள்ளேன். தொடர்ந்து எழுத எழுத இயலுமா என்பது சந்தேகமே, எனினும் அவ்வப்போது எழுதி முழுமைபடுத்துவேன் என்ற உறுதிமொழியை அளிக்கின்றேன். இது எனது முதல் கதை, முதல் பயணம், முதல் பிரச

மேலும்

நன்றி ஐயா ! தங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்னை பொறுப்புள்ளவனாக மாற்றும். எங்காவது தவறுகளோ திருத்தங்களோ இருப்பின் கூறுங்கள் ஐயா திருத்திக்கொண்டு செம்மையுடன் பயணிக்க உதவும்... நன்றி 11-Feb-2015 8:42 am
பரிசு பெற்ற பலர் இங்கு என்னை பாராட்டுகின்ற பொழுது நானும் அன்பெனும் பரிசை பெற்றவன் போல் உணர்கிறேன். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ! தொடர்ந்து பயணிப்போம் ... 11-Feb-2015 8:40 am
நன்றி தோழியே ! தொடர்ந்து ஆதரவும் , தவறுகள் இருப்பின் சுட்டிகட்டியும் உதவுங்கள்..... 11-Feb-2015 8:39 am
நன்றி அண்ணா ! தங்களைப் போன்றோர் தரும் ஊக்கமே என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது ! 11-Feb-2015 8:37 am

மாண்டது மனிதத்துவம்
நீண்டது மதத்துவம் !

சரிந்தது சமத்துவம்
வளர்ந்தது சாதித்துவம் !

மதம் பார்த்து நாம்
மாற்றியது என்ன ?

சாதி பார்த்து நாம்
சாதித்தது என்ன ?

அங்கே இனம் அழிந்த போது
இங்கே ஐம்புலம் அடங்கிப் போனதென்ன ?

அங்கே ஆதரவின்றி அகதியாய் வந்தான்
இங்கே ஆதரவு தந்தும்
அகதியாய் வாழ்வதென்ன ?

சிறைக்குள்ளும் முல்வேளிக்குள்ளும் வாழ
பயந்து தானே வந்தான் !

இங்கேயும் சிறைச்சாலையிலும் முகாமிலும்
அடைத்து வைப்பதெனில் !

இரு நாடுகளின் நோக்கமென்ன ?

என் முன்னே என்னினம் வதைபடுவதும் கொள்ளப்படுவதும் ஏன் ?

என்னால் எதையும் தடுக்க முடியாமல்
போனதே காரணம் என்ன ?

நீய

மேலும்

மிக அருமை நண்பரே . 18-May-2015 7:16 am
நன்றி தோழர் தோழிகளே 18-Jun-2014 9:58 am
அருமை..... 17-Jun-2014 7:24 pm
அருமை நட்பே 17-Jun-2014 7:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவர் பின்தொடர்பவர்கள் (30)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (30)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே