கொலை

மாட்டிறைச்சி தின்றாலும் கொலை
விற்றாலும் கொலை

முற்போக்குதனமாய் எழுதினாலும் கொலை
பேசினாலும் கொலை

தாழ்த்தப்பட்டவன் என்றால் கொலை
நீதி கேட்டு நிமிர்ந்தாலும் கொலை

புரட்சிகரமாய் பாடினாலும் கொலையா ?

மது ஒழிப்பு பிரச்சாரப் பாடலை பாடிய
தோழர் கோவன் அவர்கள்
தேச துரோக வழக்கில் கைது

இந்த கைதை ஓர் கொலையாகவே
நான் பார்க்கிறேன்

கோவன் குரலில் என்ன பிழையா ?
கோவன் பாடலில் தான் பிழையா ?
அல்லது ஜனநாயக தோல் போர்த்திக்கொண்டு
சர்வாதிகார ஆட்சியாளர்கள் செய்யும் துரோகத்தை
பாடியது தான் குற்றமா ?

ஜெயாவும் கருணாவும் காங்கிரசும் பாஜகவும்
செய்யாத பிழையையா ? செய்யாத குற்றத்தையா ?
தோழர் கோவன் செய்துவிட்டார் ?

குடியால் சீரழிந்து போகும்
குடிமகன்களை காக்க

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
என கட்டுண்டு வாழும் மூடச்சிகளின்
தாலியை காக்கவே பாடினார் தோழர் கோவன்

அத்தகைய குரல் போலி சட்டத்தின் மூலம்
கொலை செய்யப்பட்டிருக்கிறது
அராஜக ஆட்சியாளர்களுக்கு சங்கு ஊதிய
குரல் நெறிக்கப்பட்டு இருக்கிறது

மக்களுக்காக போராடிய உண்மை கலைஞன்
மக்கள் கலைஞன் கோவன் ஒருவனே
அவனும் தனி ஒருவனே !

கோவன் கைதை கண்டிப்போம்
தன் குரல் கொடுத்து போராடியவரை
விடுதலை செய்திட
நாம் குரல் கொடுத்து போராடவோம்

தமிழக அரசே மத்திய அரசே
விடுதலை செய் விடுதலை செய்
கோவன் அவர்களை விடுதலை செய்

தமிழக அரசே மத்திய அரசே
விடுதலை செய் விடுதலை செய்
கோவன் அவர்களை விடுதலை செய்

தமிழக அரசே மத்திய அரசே
விடுதலை செய் விடுதலை செய்
கோவன் அவர்களை விடுதலை செய்

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (30-Nov-15, 10:11 am)
Tanglish : kolai
பார்வை : 135

மேலே