தமிழகம்

தள்ளாடுது தமிழகம் இதுதானோ
தங்கத் தாரகையின் இராஜ்ஜியம்
மது நீரில் பாதி
மழை நீரில் மீதி
மூழ்கித்தான் கண்டோமே பீதி
தாத்தாவும் பாட்டியும்
பட்டபாடு அப்பட்டம்
ஆகித்தான் போனது
ஆனாலும் கை விரல்
தேர்தல்னு வந்துட்டா
சூரியனையோ ரெட்ட
இலையோத் தான் தேடுது
தமிழ் நாடே ரெண்டு வீட்டு சொத்தாச்சு
சொரண்டி சொரண்டி எல்லாத்தையும் வித்தாச்சு
ஆனாலும் நிக்கலையே
மானம் கெட்ட மக்களின்
சொரனகெட்ட வக்காளத்து பேச்சு
அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை
காசு வாங்கிக்குனு
அதிகாரத்தை குத்தகைக்கு விடும்
மக்கள் குத்தமும் மறந்தே போச்சு !
யானை குதிரை எல்லாம் கொண்டு
படையெடுத்து வந்து அடிமையாக்கினால்
அது மன்னராட்சி
ஆடு மாடு மிக்சி கிரைண்டர்
டிவி எல்லாம் வாங்கிகிட்டு
நாமாக தேடிச் சென்று
ஒட்டு போட்டு
இன்னாருக்கு நான்
5 வருஷம் அடிமையாகிறேன்
என்பது ஜனநாயக ஆட்சி
எம் தேசத்தின் மக்களாட்சி
நமக்கெதுக்கு இதெல்லாம்னு ஒதுங்கி போற
உன்னாலும் என்னாலும் தான்
நாடு நாசமா போச்சு , இதுல
அரசியல்வாதிகளை குத்தம் சொல்லுறது
வெட்டி பேச்சு....
செந்தில்குமார் ஜெயக்கொடி