”நான்”
கூடலும்..ஊடலும்
நினைவுகள்…
நிழலாட!
அடுத்த நொடி…
மேலாளரின்
வசவு வார்த்தைகள்!
வசவு வார்த்தைகள்
வழங்கிய
மேலாளரை…
கொல்கிறேன்!
மனதளவில்தான்!
ஐீன்ஸ்…லெக்கின்ஸ்
என்றோ கேட்ட
இனிய மகளின்
இன்குரல்!
பல்சர் கேட்ட
பையனின்
பிடிவாத கூச்சல்!
கட்டுக்கட்டாய்
கரன்ஸிகள்
குறுக்கு வழி போ
கூறிற்று
கோணல் புத்தி!
இவையெல்லாமே…
என்னுள்ளே!
எப்பொழுதுதான்
புத்தர் ஆவது
”நான்”
கே.அசோகன், திருவள்ளுர்