மெல்லிசை மன்னர் வாழ்கிறார்

நீங்கள் இறந்து விட்டீரா?
கடல் அலை ஓய்ந்து விட்டது
என்றால் யாராவது நம்புவார்களா?
வற்றாத கடல் அல்லவா நீ
ஓயாத அலையல்லவா உன் இசை!
உனக்கேது மரணம் ?
காலத்தோடு கலந்து வாழ்பவன் நீ
காலத்திற்கு ஏது மரணம் !
இசையாகா வாழ்கிறாய் நீ !
இசைக்கு ஏது மரணம் !
வாழ்ந்தாய் !
வாழ்கிறாய் !
வாழ்வாய் !
மண்ணில் மரணமற்ற மனிதர்கள் சிலரே !
அதிலொ ருவனானாய் நீயின்று !

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 3:27 pm)
பார்வை : 806

மேலே