எம் கலாமுக்கு அஞ்சலி

எதையும் சொல்வதற்கு ஓர்
தகுதி வேண்டும் என்பேன் !
அத்தகுதி உமக்கு மட்டுமே
இவ்வுலகில் உண்டு என்பேன் !

நினைத்து பார்கிறேன் நீங்கள் சொன்னதை !

நமது பிறப்பு ஓர் சம்பவமாக இருக்கலாம் - ஆனால்
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் !

சரித்திரமே நீ என்றும் சாவதில்லையே ! ! !

தமிழன்னை பெற்ற பிள்ளையல்லவா நீ !
தன்மானமும் காத்து வாழ்ந்தாய் !
தாய்நாட்டு மானமும் காத்து
பெருமை சேர்த்தாய் !

வாழ்ந்து காட்டினாய் வழிகாட்டியாய் !!
சாய்ந்து விட்டாய் நினைவூட்டியாய் !!!

அறிவை ஊட்டிய ஆசானே !
அகிலமும் போற்றும் ஈசனே !
அவதரிப்பாயா மீண்டும் ஒருமுறை ?
முதல்வனாய் அலங்கரிப்பாயா என் தேசத்தை ?

நீ நிகழ்த்திய அணுச்சோதனை !
எம் நாட்டிற்கு பெரும் சாதனை !
எதிரி நாட்டினர்க்கு பெரும் வேதனை !

உலகமே உன்னிடம் ஓர் கேரிக்கை
இந்த இளைஞனின் இறந்த தினத்தை
உலக இளைஞர் தினமாக அனுசரிப்பாயா ?

இளைஞனே நீ இறந்து விடவில்லை !
ஒவ்வொரு இளைஞனின் இதயத்திலும் வாழ்கிறாய் !

கனவு காண கற்றுத்தந்த காவியமே !
கனவாய் மாறக்கூடாதா உன் மரணமே ?

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (26-Aug-15, 3:24 pm)
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே