ஒளிந்திருக்கும் கவிதை

வீட்டினருகின் பெரும்பூங்காவை
நோக்கமின்றி வலம் வரும் நான்...
இறகுப் பந்தை பறக்கவிடும்
வட இந்திய யுவதிகள்.....
ஸ்கேட்டிங்கை பயிலும் அரேபிய
ஆப்பிரிக்க சிறுவர்கள்...
பேரீச்சம்பழம் உதிர்க்கும்
நேர்கோட்டு ஈச்ச மரங்கள்....
மஞ்சள் பனியனணிந்த
பிலிப்பைன்ஸ் நாட்டிளைஞன்.....
பார்த்தவுடன் புன்னகைக்கும்
நைஜீரிய அழகி...
உடற்பயிற்சிக்கு எத்தனிக்கும்
தென்னாப்பிரிக்க வயோதிகர்...
விர்ரென கடந்துவிட்ட
ஒல்லிக்குச்சி உடம்புக்காரி....
நொடிப்பொழுதில்
சாலையால் விழுங்கப்பட்ட
லம்போர்கினி மகிழுந்து....
பரந்து விரிந்த பசும்புல்மேனியில்
தொடர்கின்ற பெற்றோரை
வென்றுவிட்ட குட்டித்தேவதையின்
பால்பல் சிரிப்பென......
இதில் எங்கோ ஒரு மூலையில்
கவிதை ஒளிந்திருக்கலாமென்று
தொடராமல் விட்டுவிடுகிறேன்.......

எழுதியவர் : தர்மராஜ் (26-Aug-15, 3:22 pm)
பார்வை : 423

மேலே