அவன் வருவானா நாளை FEB14

#காதலர்_தின_கவிதை

#அனைத்து_உண்மையான_காதலர்களுக்கும்_சமர்ப்பணம்

அவன் வருவானா நாளை ?
~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~~~ ~~~~~~ ~~~~~ ~~~~
ஒவ்வொரு நாளும் ஓயாமல்
என்னை பின்தொடர்ந்த காவலன்
கடும் சினம் கொண்டு நான்
முறைத்த போதும் குழந்தை
முகம் கொண்டு சிரித்த குணாளன்
அவன் வருவானா நாளை ?

ஒரு கணம் கூட உன்னை காண முடியாது
என்று சொல்லி புறப்பட்ட பொழுது
ஒவ்வொரு கணமும் உன்னை மட்டுமே
காணத் துடிக்கிறேன் என ஓடிவந்த
அவன் வருவானா நாளை ?

வெறுத்து பேசினேன் விலகி நடந்தேன்
எல்லாம் பொருத்து என்னை இரசித்த
அவன் வருவானா நாளை ?

என் கண்ணில் படும்படி எத்தனையோ
சைகைகள் செய்தான் சாகசங்கள் செய்தான்
என் மீது கொண்ட அவன் அன்பை காட்ட
அன்றெல்லாம் அவனை மனநலம்
பாதித்தவனாய் கண்டேன் இன்று
நானே மனம் பாதிக்கப்பட்டு நின்றேன்
என் நோயை குணமாக்க
அவன் வருவானா நாளை ?

அவன் தூது விட்ட போதெல்லாம்
கோபித்து துரத்தி விட்டேன்
இன்று நான் தூதுவிட துணிவில்லை
அதை அறிந்து கொண்டு
அவன் வருவானா நாளை ?

எத்தனையோ இரவுகள் சத்தமின்றி போனது
இன்றிரவு மட்டும் ஏனோ இப்படி
என்னுள் சத்தம் போடுது
என் இரவை அமைதியாக்க
அவன் வருவானா நாளை ?

வருடம் முழுக்க அவன் காதலை
சொல்ல வந்தான் என்னிடம்
நான் ஒரு நாளும் கேட்டதில்லை

நாளை ஒரு நாள் மட்டும்
நான் சொல்வதை கேட்க
அவன் வருவானா நாளை ?

நேற்றுவரையானது அவனுக்கான நாள்

இன்றைய நாளானது எனக்கான நாள்

நாளைய நாளானது எங்கள் இருவருக்குமான நாள்

காதலர்களுக்கான திரு நாள்

பச்சை நிற பட்டுடுத்தி பதுமை
நான் காத்திருப்பேன் நாளை
செந்நிற பூவேந்தி சீக்கிரமாய்
அவன் வருவானா நாளை ?
அவன் வருவானா நாளை ?

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (13-Feb-15, 6:47 pm)
பார்வை : 262

மேலே