நீ யந்தா - காதலர் தின வாழ்த்துக்கள்
பூவாகும் தருணம் நீ
பா தேடும் சரணம் நீ
இல்லாத வர்ணம் நீ
கொல்லாத மரணம் நீ
இசையாகும் சொல்லில் நீ
அசைந்தாடும் புல்லில் நீ
தேன் மறந்த பசைகள் நீ
வான் நிறைந்த திசைகள் நீ
மயிலாடும் சாரல் நீ
மைல் கல்லின் தூரம் நீ
மழை தேடும் தாகம் நீ
கலைந்தாடும் தேகம் நீ
வான்காவின் காதல் நீ
வோல்காவின் கூதல் நீ
ஒளி ஆண்டின் வேகம் நீ
துளி தீண்டா மேகம் நீ
பூவாகும் தருணம் நீ
பா வாடை சரணம் நீ
மெட்டான நொடியும் நீ
மொட்டான விடியல் நீ....
நீ - நியந்தா.....
கவிஜி