காதலர் தினம்

"காதலர் தினம்""""""""""

நாளை என் உணர்வுகளுக்குள் சண்டை வரும்
நாளை நி என்னை பார்த்தால் !


நாளை உன் மௌனத்தின் பாசை
இடம் மாறி என்னில்தான் உதிக்கும்
நி மௌனமாகவே இருந்தால்!

நாளை வியப்பேன் ஒரு நிமிடம்
அதை நினைப்பேன் பல மணிநேரம்
கனவில் நான் வரைந்த ஓவியம்
கண் எதிரே அவளது உருவமாக என்று!!!!!


நாளை சுழல் வந்துச் சென்ற தடம்
என்றும் என் கன்னத்தில் இருக்கும்
அவளது முத்தத்தில்!

நாளை கணிதப் பாடத்தில் வந்த
வடிவங்களைப் பார்த்தே கற்பேன்
அவளது நெற்றியில் அந்த ஒரு பொட்டில்!

நாளை உன் கண்ணில் உள்ள ஆயுதம்
அப்படி என்னவோ என்னை அடிக்காமலும் அழவைக்கும்!

நாளை உன் மௌனம் தொடர்ந்தாள்
என் கனவு கலைந்துப் போகும்
என் இதழ்கள் வறண்டுப் போகும்
என் கண்கள் இருட்டுப் போகும்
என் இதயங்கள் சுருங்கிப் போகும்!

நாளை உன் கண்களின் அழகு
என் கண்ணில் தெரியும்!

நாளை கன்னம் என்ற வரண்ட நிலப் பரப்பில்
புற்கள் முளைத்து உதிர்ந்துப் போகும்
அவள் கொடுக்கப் போற அந்த முத்தத்தில்!

நாளை தாகம் வந்தால்
தாகத்தை தனித்துக் கொள்ள
தண்ணிரை பருகமாட்டேன்
உன் நினைவையே பருக நினைப்பேன் இப்போதும் மௌனமா என்று!

நாளை மின்னல் அடித்து என் பார்வை போகாமல்
உன் கண்ணடித்து என் பார்வை போகும்
என் கண்ணை விட்டு மட்டும் அல்ல என் உயிரை விட்டே!


வாழ்த்துக்கள்
நாளைய காதலர்களை
நாளைய காதலர் தினத்தில்!


BY
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL DEPARTMENT
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI...............

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (13-Feb-15, 7:26 pm)
Tanglish : kathalar thinam
பார்வை : 796

மேலே