ஜல்லிக்கட்டு தடை அதை உடை

ஜல்லிக்கட்டு தடை அதை உடை

புது சரித்திரம் படை !

ஆயிரம் ஆண்டு பல ஆயிரம் ஆண்டு

வீர மறவர் விளையாடிய ஆட்டமின்று

வீணர்களின் தடைக்கு அஞ்சாது !

தடை மீற தமிழினம் தயங்காது !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

தொடை தட்டி தோள் உயர்த்தி
நெஞ்சை நிமிர்த்தி நீ ஆடடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

கோழைகளின் கொடுஞ்செயலே தடையடா
கோமக்களே கொடுந்தடையை உடையடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

பைந்தமிழ் பறையனே பறை கொண்டு அடியடா
ஜல்லிக்கட்டு தடைமீர் தமிழா என்றே உரையடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

அறிமுகம் செய்த ஆயனே அணித்திரலடா
காளைகளோடு களம்புகுந்து் தடையை உடையடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

தேவனே உன் வீரத்திற்கு போட்ட தடையடா
தேவையில்லை தடைச்சட்டம் அதை உடையடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

வன்னியனே வரவேற்கும் உன்னை களமாட
வரிப்புலியென பாய்ந்து வஞ்சத்தடை மீறடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

கோனாரே உன்குல விளையாட்டடா
கொதித்தெழுந்து கூடி வந்து விளையாடடா !

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

தமிழ் ஜாதியே இது பண்பாட்டு தடையடா
பகை மறந்து தரம் துறந்து
நீ திரண்டு வந்தால்
தடைகள் யாவும் தவிடுபொடி ஆகுமடா.....
ஜல்லிக்கட்டு தடை தகர்ப்போமடா......

ஆடடா நீ ஆடடா வீரத்தமிழனே
அஞ்சாமல் மஞ்சுவிரட்டி நீ ஆடடா !

#செந்தில்குமார்_ஜெயக்கொடி

எழுதியவர் : செந்தில்குமார் ஜெயக்கொடி (5-Jan-16, 12:42 pm)
பார்வை : 364

மேலே