+++குடி குடியை கெடுக்கும்+++நாகூர் லெத்தீப்

சாலைகள் குறுகி
நெருகி தெரிகிறதாம்
தலைகால் தெரியாமல்
அலைகிறானே.........!

மாத வருமானம்
குடிப்பதற்க்கா குடித்தனம்
நடத்துவதர்க்கா........!

அடியும் இடியுமாய்
காலத்தை கழிக்கும்
வாழ்க்கையையும்
வெறுக்கும்
இல்லத்தரசிகளே.........!

குடிகார கூட்டத்தில்
கூடுகிராய் உனது
குடும்பத்தை சாடுகிறாய்........!

சாலையோர
சாக்கடைகள்
உறங்குவதற்கு
உனக்கே ஏத்த இடம்.........!

குடியால் மதி கெட்டு
குடியிழந்தாய்
பெயர் கெடுத்தாய்.........!

அறிவை மயக்கும்
மதுவினால்
மதியிழந்தாய்
உலகையும் மறந்தாய்.........!

உனது தோழமைகள்
குடிப்பதற்கே உலகை
மறந்து சிரிப்பதர்க்கே.........!

தடுக்க முடியாத
மரணம் எத்தருனமும்
உனக்கே நிகழுமே..........!

இறை கொடுத்த
பிண்டத்தை தண்டமாக
கருதி குடிக்கிறாயே
உனை நீயே
தண்டிக்கிறாயே.........!

மதுவினால் மயக்கம்
மதிகெட்ட செய்கையால்
குடும்பத்திற்கே கழங்கம்.......!

குடியினால்
இருதியில்
கிடைக்கப்போகும்
பெரிய பரிசு
அறியுமா உனக்கு........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (17-Jun-14, 11:54 am)
பார்வை : 81

மேலே