அகக்கடல் கொந்தளிக்க

அலைக்கடல் அமைதியில்
அகக்கடல் கொந்தளிப்பில்

அவள் அமர்ந்திருந்தாள்
கடற்கரையில்

அவனை எதிர்பார்த்திருந்தாள்
தினம் காத்திருந்தாள்

கண் விழிகள் நோகும்
வரை, பார்வைகள் போகும்
தொலைவு வரை, பார்த்திருந்தாள்

என் உயிர் நீ என்று சொன்னவனை
காணவில்லை நெடுநாட்களாகவே

அவன் தந்த உயிரை சுமந்திருந்தாள்
அவள் தன் கருவினிலே

கடற்கரையின் படகோரத்தில்
இருளான ஒரு நேரத்தில் இழந்திருந்தாள்
தன்னையே அவனிடமே

இன்று அகமும், புறமும் கொதித்திட
அமர்ந்திருக்கின்றாள், சோக சிலையாக

முடிவெடுத்தாள் மனதுக்குள்ளே
எழுந்து நடந்தாள், கடற்கரையை விட்டே

கருவில் உருவானதை பெற்று ஒரு
நல்ல குழந்தையாக வளர்த்திடவே

அதன் வாழ்வை செழுமையாக்கிடவே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (19-Jun-14, 4:34 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 53

மேலே