விழியோரம் சிந்தும் கண் ---நதி நீர் -- ணீர்
வயிறு நனைய வில்லை
சுருங்கிப் போனதில்
விரக்தியுடன் மணல்...!
உமிழ்கிறது ஆறு
வெட்டப் பட்ட
மரங்களைப் பார்த்து...!
தவமாய் கிடக்கிறது
பாறைகள்
அழுக்கை நீக்க வேண்டி...!
குடி நீர் விற்பனைக்கு
நதி நீர் வயிறு
காய்ந்த போதிலும்....!
பரிசல்கள் காத்திருப்பு
வரிசை வரிசையாக
பிரார்த்தனை ..!
ஏழை பணக்காரன்
என்ற பேதமில்லை
நதிநீருக்கு....!
சுருங்குகிறது
வயிறு மட்டும் ரேகைகளாக
பசி என சொல்லாமல்
நதியின் கேள்வி
நான் விற்பனைக்கு அல்ல ....?