இப்படியும்
மாற்று மத பெண்மணியை அடக்கம் செய்த 'தமுமுக'வினர்
இன்று (18/6/2014) காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்கால் என்ற பகுதியில் மாற்றுமத பெண்மணி ஒருவர் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.
அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்களோ அல்லது அந்த பெண்ணின் மதத்தை சேர்ந்தவர்களோ அடக்கம் செய்ய தயாராக இல்லை.
இந்த தகவல் தமுமுக'விற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே களத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது.
லால்பேட்டையில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள், களத்திற்கு சென்றனர்.
முஸ்லிம் பெண்கள் சிலர் நமக்கு உதவியாக அந்த பெண்ணிற்கு செய்யவேண்டிய இறுதி வேலைகளை செய்து கொடுத்தார்கள்.
எல்லா வேலைகளும் முடிந்தவுடன் தமுமுக ஆம்புலன்சில் எடுத்துகொன்டு மாயானத்தில் அடக்கம் செய்தார்கள்.
சகோதரர்களின் சேவைக்கு மறுமையில் அல்லாஹ் நற்கூலிகளை கொடுப்பானாக!