தண்ணீர் குழந்தை

குரல் காணா
உருவம் காணா
மனம் காணா காற்றாய் மாறி
காற்றை தேடி அலைகிறேன் உன்னைக் காண!

மெல்லினக் குரல் கற்பனை கொண்டு
பச்சிளங் குழந்தை உடல் கொண்டு
பச்சை மரம் மனம் கொண்ட
உன்னை காண முடியாதா என்று தேடுகிறேன் !

கவிதைகளும் காதல் செய்ய
உன்னைத்தேடி அலைகிறதோ
என்று தெரியவில்லை
நான் பிறந்த ஊரில் !

தங்க நிறமும்
வைர நிறமும் புதைந்து கிடக்கையில்
உண்மை அன்பை உடலில் பொருது
வாழ்கிறாய்
எனக்காக என்று நினைத்துக்கொண்டு !

பருவக் காற்று ஒன்று
திசை மாறி உருவம் கொண்டு
நிழல் கொண்ட ஓவியமாய் அலைகிறது
நான் வளர்ந்த ஊரில் !

சாலைகள் கண்டு
களிக்காத அழகுத் தேவதை ஒன்று
கடிவாளம் கொண்டிராத லாயத்தில் அடைக்கப் பட்டுள்ளது தான் வேதனை !

வெருங்கல் ஒன்று
சிலையாய் மாறுகிறது என் வார்த்தை
உளியினால் !

அவள் பெயர்
தண்ணீர்க் குழந்தை
மண்ணின் எதிரி
அமைதி வீசும் கரும்பாறை !

அன்புப் புயல் வீசுமோ என்று
வில்மட்ஸ் மரம் ஒன்று ஏங்குகிறது !

மண்ணை தாண்டி செல்கையில்
காற்று மனம் கொள்கிறது !

மேகம் தாண்டி செல்கையில்
ஒளியும் உணர்வு கொள்கிறது !

உன் விருப்பம் தாண்டி செல்கையில்
என் உயிர் காதலை கொள்கிறது !

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (19-Jun-14, 10:15 pm)
Tanglish : thanneer kuzhanthai
பார்வை : 137

மேலே