விழித்துக்கொள் என்னினமே

அன்று நம்மினம்
நாடோடியாய் தேடலை
தொடங்கி
இடம் பெயர்தலை
கொண்டானர்..!

இழைப்பதை ஆற்றி
இருப்பதை உண்ண
உறைவிடம் கண்டு
சமைப்பதை கற்றனர்..!

ஆசைகள் தோன்றவே
இயல்பதை மாற்ற
தேவைகள் நாடிட
நாகரீகம் வளர்த்தனர்..!

அன்றைய மனிதர்கள்
கற்றதை தாண்டியும்
பிறர் கற்றிடும் வழிதடம்
தன்னினம் என்றே வாழ்ந்தனர்..!

.............இன்றோ மனிதா ................

நீ நிலைப்பதை வெறுத்து
துறப்பதை சேர்த்து
உன் அழிவு அதை தேடி
நீ பயணிப்பதேனோ?....?

முடிவு அது உன் அருகில்
விளித்துகொள் மானிடனே..
வலியின்றி மரிக்க நாளும்
வழிதேடிடு என் அன்பினமே..!

...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (20-Jun-14, 12:06 pm)
பார்வை : 107

மேலே