வேடிக்கை மனிதர்கள்
"உலகத்தில் உள்ள மொத்த
உறவுகளின் சங்கமமாம் நட்பு
எண்ணி பார்கிறேன்-இது
உண்மையா என்று
நிச்சயம் இல்லை!"
"உதிரம் தரித்து உயிருக்கு
போரடியவனை உயிர் கொடுத்து
காப்பாற்ற ஓடி வருவது நட்பாம்
எண்ணி பார்கிறேன்-இது
உண்மையா என்று
நிச்சயம் இல்லை!"
"வேளையில்லாமல் உணவுக்கு
வழியில்லாமல் வாடுபவனுக்கு
வாழ்வின் ஒளியாய் இருப்பது நட்பாம்
எண்ணி பார்கிறேன்-இது
உண்மையா என்று
நிச்சயம் இல்லை!"
"நட்புக்கு விளக்கம் தெரியாமல்
நட்பென்று பறைசாற்றும்
மனிதர்களுக்கு என்னவென்று
சொல்வது
"உலகத்து சொந்தமாகவும்
உயிர்காக்கும் கடவுளாகவும்
வாழ்வின் ஒளியாகவும்
இருப்பதல்ல நட்பென்று.!"
நட்பென்பது ஒரு பேராத்மா...!
அழிவில்லா காற்றாலை...!
வற்றாத நீரோடை...!
அன்பின் வாசம்...!