தம்மொளி வேண்டுவார் நோக்கார் - ஆசாரக் கோவை 51
மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள்
...கோலமுந்
தம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியு மற்று. 51 ஆசாரக் கோவை
பொருளுரை:
தாம் புகழ் பெற வாழ விரும்புபவர் மின்னலின் ஒளியையும், விழுகின்ற எரிநட்சத்திரத்தையும், விலைமாதரின் ஒப்பனையையும் பார்க்கமாட்டார்.
பகலுக்கு உரியவனான சூரியனின் காலைஒளியும், மாலைஒளியும் பார்க்கத் தகாதன எனப்படுகிறது.