பிறப்புரிமை அறிவிப்பு

அன்புள்ள வாடிக்கையாளர்களே! பொறியியல் படித்தவர்கள் அவர்கள் பெயருக்கு முன்னால் Er. (Engineer) ன்னு போட்டுக்கறாங்க. வங்கி அதிகாரிகளும் இனிமேல் அவர்கள் பெயருக்கு முன்னால் Br. (Banker) ன்னு போட்டுக்கப் போறாங்களாம். வாரம் தவறாமல் நீங்கள் சுவைக்கும் இறைச்சியைப் பக்குவமாக வெட்டி உங்களுக்கு வழங்குகிற நாங்களும் எந்த வகையிலும் மதிப்பில் குறைந்தவர்கள் இல்லை. எனவே இறைச்சியை வெட்டி விற்பனை செய்யும் நாங்களும் எங்கள் பெயருக்கு முன்னால் இனிமேல் Br. (Butcher) ன்னு போட்டுக்கப் போகிறோம். அது எங்களது பிறப்புரிமை.