வண்ணங்களும் வாழ்க்கையும்
வாழ்வில் இருள் சூழ்ந்திருந்தது .....
வண்ணங்களைத் தெளித்தாய் ......
வறுமை(சோகம்) தெளிந்தது....
வண்ணங்களை காண கதிரவனும் ஏங்கினான்....
வெளிச்சத்தை அளித்து பிரகாசித்தான்..
பிரகாசித்தது அவன் மட்டும் அல்ல என் வாழ்வும் தான்...
நீண்ட நாட்கள் நிலைத்த வண்ணங்கள்
சாயம் போகத் தொடங்கின..
ஒரு கனத்தில் அவ்வண்ணங்களை நீயே தண்ணீர் ஊற்றி அழித்தாய்...
சுவடுகள் மட்டும் மிச்சமிருந்தன....
மறுகனத்தில் என் கண்ணீர் துளிகள் அச்சுவடுகளையும் அழித்தன.....
என்றும் பிரியா கருமை நிறம் மட்டும் மிஞ்சியது ..
இப்போதும் போலிச் சிரிப்புடன் இருளை தொலைக்கும்
பல வண்ணங்களுக்காக காத்திருக்கிறது
என்னுள் துடிக்கும் சிகப்பு உயிர் (இதயம்)......:-(....