நிழல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிழல் |
இடம் | : kanchipuram |
பிறந்த தேதி | : 20-Feb-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 14 |
சொற்களால் இயங்குபவள்
வாழ்க்கை சாலையிலே''
என் வண்டி ஏன் ஓடவில்லை''
வறுமையின் பிடியினிலே
எரிபொருள் தீர்ந்தது இங்கே
பொறுமையின் மடியினிலே
நாளும் என் உயிர் போவதேங்கே
கன-ரக-மனிதரும்
கனத்த ஒலி கொடுக்கையிலே!
மன-முக-பிணிவரும்
எதிர்க்க வழி இருப்பதிலே
சிவப்பு நிற விளக்கு இது
என் வாழ்வை சிறப்பாய் விளக்குது
மஞ்ச-வண்ணமாம் ஒளி ஒன்று
நெஞ்ச திண்ணமாம் ஆக்கும் வழி நன்று
இளம்பச்சை வெளிச்சம் அதோ அதோ
வாழ்வின் மிச்சம் இதோ இதோ
சகவாழ்க்கை ஓட்டிகள் வேகம் பிடிக்கையிலே
என் வாழ்க்கை சக்கரம் ஏன்
சுழலவில்லை??!
வாழ்வில் இருள் சூழ்ந்திருந்தது .....
வண்ணங்களைத் தெளித்தாய் ......
வறுமை(சோகம்) தெளிந்தது....
வண்ணங்களை காண கதிரவனும் ஏங்கினான்....
வெளிச்சத்தை அளித்து பிரகாசித்தான்..
பிரகாசித்தது அவன் மட்டும் அல்ல என் வாழ்வும் தான்...
நீண்ட நாட்கள் நிலைத்த வண்ணங்கள்
சாயம் போகத் தொடங்கின..
ஒரு கனத்தில் அவ்வண்ணங்களை நீயே தண்ணீர் ஊற்றி அழித்தாய்...
சுவடுகள் மட்டும் மிச்சமிருந்தன....
மறுகனத்தில் என் கண்ணீர் துளிகள் அச்சுவடுகளையும் அழித்தன.....
என்றும் பிரியா கருமை நிறம் மட்டும் மிஞ்சியது ..
இப்போதும் போலிச் சிரிப்புடன் இருளை தொலைக்கும்
பல வண்ணங்களுக்காக காத்திருக்கிறது
என்னுள் து
அன்று , நான் நேசித்த அவளும் எனக்கு கிடைக்கவில்லை ..
இன்று , என்னை நேசிக்கும் இவளும் நிலைக்கவில்லை..
அனைத்தையும் கூறுகிறேன் என்று சொல்லி அவள் சென்றாள்,
அனைத்தையும் மறைகிறேன் என்ற சொல்லி இவளும் சென்றாள்,
அன்று , அவள் என்னை பிரியமாட்டேன் என்று உண்மையாக நடித்தாள்..!!
அதையும் நம்பினேன்....
இன்று இவள் என்னை பிரிய மாட்டேன் என்று உண்மையாக நடந்தாள்...!!
இதையும் நம்பினேன்...
இரண்டையும் நம்பியதன் விளைவு
இருவரும் கண்ணீரை பரிசாய் தந்துச் சென்றனர் கானல்நீராய்....
இப்போது அறிகிறேன் பிரியத்தின் முடிவு பிரிவு என்பதை ..........:-( :'(
மீனிலும் அழகிய விழிகளை கொண்டவளே,
என் கண்கள் என்னை காண ஆசைப்படுவதை விட
உன் கண்களை காண்பதில் தான் ஆர்வம் கொள்கிறது.....
தாய் பாசத்தைக் கற்பித்தாள்
தந்தை பொறுப்பைக் கற்பித்தார்
தமைக்கை அன்பானச் சண்டையை கற்பித்தாள்
தமையன் ஆதரவைக் கற்பித்தான்
தங்கை விட்டுக்கொடுத்தலைக் கற்பித்தாள்
ஆனால்,
இவை அனைத்துமே ஓர் உயிரிலே இருக்கும்
என்று கற்பித்த ஓர் உன்னதமான உறவு தான்
நட்பு...!!!!!!!!!!
மீனிலும் அழகிய விழிகளை கொண்டவளே,
என் கண்கள் என்னை காண ஆசைப்படுவதை விட
உன் கண்களை காண்பதில் தான் ஆர்வம் கொள்கிறது.....
உன்னை பார்பதற்காக விடியற்காலையில்
விரைவாக விழித்துக்கொள்கிறது சூரியன் ...
அதனை அறிந்து நீயும் விழித்துக்கொள்கிறாய்..
இரவு நேரத்தில் உன்னை காண்பதற்காக
விண்ணில் காத்த்துக்கொண்டிருகிறது நட்சத்திரம்
அதனை அறிந்து நீயும் அதை காணச் செல்கிறாய் ..
ஆனால் ,
இரவும் பகலும் உனக்காக மட்டும் காத்திருக்கும்
என்னை மட்டும் ஏன் தெரிந்தும்
மறந்துவிடுகிறாய்....????????
தாய் பாசத்தைக் கற்பித்தாள்
தந்தை பொறுப்பைக் கற்பித்தார்
தமைக்கை அன்பானச் சண்டையை கற்பித்தாள்
தமையன் ஆதரவைக் கற்பித்தான்
தங்கை விட்டுக்கொடுத்தலைக் கற்பித்தாள்
ஆனால்,
இவை அனைத்துமே ஓர் உயிரிலே இருக்கும்
என்று கற்பித்த ஓர் உன்னதமான உறவு தான்
நட்பு...!!!!!!!!!!
நான் துன்பத்தின் உச்சகட்டத்தில்
துவண்டு கொண்டிருக்கும்போது
"நான் இருக்கிறேன்" என்று
துணையாக வந்த தோழனே-இன்று
எனக்கு ஏற்படும் அத்தனை வலிகளுக்கும்
காரணமாக நீ இருப்பது ஏனோ...???