வாழ்க்கை சாலையிலே
வாழ்க்கை சாலையிலே''
என் வண்டி ஏன் ஓடவில்லை''
வறுமையின் பிடியினிலே
எரிபொருள் தீர்ந்தது இங்கே
பொறுமையின் மடியினிலே
நாளும் என் உயிர் போவதேங்கே
கன-ரக-மனிதரும்
கனத்த ஒலி கொடுக்கையிலே!
மன-முக-பிணிவரும்
எதிர்க்க வழி இருப்பதிலே
சிவப்பு நிற விளக்கு இது
என் வாழ்வை சிறப்பாய் விளக்குது
மஞ்ச-வண்ணமாம் ஒளி ஒன்று
நெஞ்ச திண்ணமாம் ஆக்கும் வழி நன்று
இளம்பச்சை வெளிச்சம் அதோ அதோ
வாழ்வின் மிச்சம் இதோ இதோ
சகவாழ்க்கை ஓட்டிகள் வேகம் பிடிக்கையிலே
என் வாழ்க்கை சக்கரம் ஏன்
சுழலவில்லை??!