அனுபவ அலைகள்

கடந்து வந்த வாழ்க்கையின்
அனுபவ அலைகள்
நெஞ்சில் மோதுகிறது
நடந்து வந்த பாதையின்
சுவடுகள்
கண்ணில் தெரிகிறது
மீண்டும்
அனுபவ வீதியில் நடக்கிறேன்
சுமையாய் சுகமாய்
சுவடுகள்
என்னைத் தொடர்கிறது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Sep-16, 10:25 am)
Tanglish : anupava alaigal
பார்வை : 199

மேலே