காரை அருண் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  காரை அருண்
இடம்:  Karaikal
பிறந்த தேதி :  23-Dec-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2016
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  11

என்னைப் பற்றி...

தமிழ் காதலன். எளிய கவிஞன். பெரிய ரசிகன்!!

என் படைப்புகள்
காரை அருண் செய்திகள்
puthukavi2016 அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Sep-2016 11:23 am

வாழ்க்கை சாலையிலே''
என் வண்டி ஏன் ஓடவில்லை''
வறுமையின் பிடியினிலே
எரிபொருள் தீர்ந்தது இங்கே
பொறுமையின் மடியினிலே
நாளும் என் உயிர் போவதேங்கே
கன-ரக-மனிதரும்
கனத்த ஒலி கொடுக்கையிலே!
மன-முக-பிணிவரும்
எதிர்க்க வழி இருப்பதிலே
சிவப்பு நிற விளக்கு இது
என் வாழ்வை சிறப்பாய் விளக்குது
மஞ்ச-வண்ணமாம் ஒளி ஒன்று
நெஞ்ச திண்ணமாம் ஆக்கும் வழி நன்று
இளம்பச்சை வெளிச்சம் அதோ அதோ
வாழ்வின் மிச்சம் இதோ இதோ
சகவாழ்க்கை ஓட்டிகள் வேகம் பிடிக்கையிலே
என் வாழ்க்கை சக்கரம் ஏன்
சுழலவில்லை??!

மேலும்

உன் நம்பிக்கை சக்கரம் சுழல்கிறது விடியலை நொக்கி விரைகிறது.. விடியற்காலம் விரைவில் உன்னருகில்,! 22-Sep-2016 2:20 pm
மனிதனின் வாழ்க்கை நொடிக்கு நொடி பூமியோடு சுழல்கிறது ஆனால் விடியலை மட்டும் தூரத்தில் தேடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2016 9:51 pm
மிக நன்று நண்பரே :) 19-Sep-2016 2:50 pm
நன்றி தோழரே!மகிழ்ச்சி உங்களின் வாழ்த்துக்கு! 19-Sep-2016 12:14 pm
காரை அருண் - puthukavi2016 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2016 3:13 pm

என் வருகை கனவை வளர்த்தவளே,
என் இதயம் துடிக்கும் முதல் நிமிடத்திலே
என் உயிர் காக்க
உன் கருவறையில்
இடம் கொடுத்தவளே,
உன் மூச்சில் நான் சுவாசித்தேன்,
உன் உணவில் நான் புசித்தேன்,
உன் உயிர் வலிக்க ,என் உயிரை வளர்த்தாய்,
அதனால் தான் நீ தாய் !
பல நாள் உறக்கம் உன் கண்கள் பார்க்கவில்லை
நீ என் மீது கொண்ட இரக்கம் தோற்கவில்லை
சிரமம் கொண்டு சுமந்தாய்
உருவம் எனக்கு கொடுத்தாய்
வலிமை இன்றி தவித்தாய்
வலியும் சுகம் என நினைத்தாய்
இதனால் தான் நீ தாய்!!!
உன்னுள்ளே இருந்த என்னை
இவ்உலகிற்கு கொடுத்தாய்
என் முகம் பார்த்து நீ மகிழ்ந்தாய்,
என் அழுகையும் உன்னை ஆனந்தபடுத்தியது அன்று தானே,
என் தியாக ப

மேலும்

உண்மைதான் தோழரே!நன்றி!!! 07-Sep-2016 9:56 am
உங்கள் தாய் உங்கள் மகளாய் வரும் நேரம் நெருங்கி விட்டது :) அருமையான படைப்பு....வாழ்த்துக்கள் :) 07-Sep-2016 9:07 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2016 10:59 am

61.கறுப்புச் சட்டைக்காரனின் கண்கள் குருடானால்
கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையும்
சிரிக்கும் நோட்டில் அழுகின்ற நியாயத்தை காணலாம்

62.அழகான பூக்களின் பாரத்தை தாங்கி நிற்கும் வேர்கள்
தியாகத்தின் வேதத்தை மண்ணுக்குள் மெளனமாய் ஓதியது

63.கங்கையில் குளித்து மென்மையாய் சிரிப்பவனும்
மனதின் அழுக்குச் சட்டையை கழுவிக் கொள்ள முடியவில்லை

64.மனிதன் தோள்கள் வர்ணங்களால் மாறுபட்டாலும்
தரையில் விழுகின்ற நிழல்கள் என்றும் கருமை தான்

65.கனவினுள் சிந்தியும் சிதறாத சிந்தைகள்
நினைவில் மட்டும் அங்குமிங்கும் அலைந்து திரிகிறது.

66.குடிசைக்குள் எரிகின்ற குப்பின் விளக்கின் தீபமும்
ஏழையின் சிரிப்ப

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Sep-2016 10:37 am
உண்மையான அவலங்களை கவிமூலம் வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள் நண்பா..! 19-Sep-2016 11:59 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Sep-2016 6:16 am
நன்று நன்று வாழ்த்துக்கள் மொகமது 09-Sep-2016 8:26 pm
puthukavi2016 அளித்த படைப்பில் (public) puthukavi2016 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2016 10:47 am

இவள் வைரபூக்களின் கோலமா?
நிலவில் வசிக்கும் அன்னம்மா?
என் கையில் கிடைத்த தேன் கிண்ணமா?
என் உயிர் காதல் நீ யம்மா!
பார்க்க பார்க்க பரவசம் நிலவை போல் உன் முகம்,
கேட்க கேட்க சுவாரசியம் தித்திக்கும் உன் தமிழ்,
உன் காதின் மடல்களும் காதல் மொழி பேசுதே,
உன் கூந்தல் நறுமணம் என் உயிர் வரை சென்று வீசுதே,
நீ பூக்கும் புன்னகை பூக்கள் எல்லாம் என் நெஞ்சுக்குள் புதையுதடி பொக்கிஷமாய்,
உன் விரல் தொடும் சுகம் மட்டும் போதும் எனக்கு யுக யுகமாய்,
காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என் காதலை காதலிக்கிறேன்,
என் காதலியை காதலிக்கிறேன்,என் கடைசி மூச்சு உள்ள வரை அல்ல,
இவ்உலகின் உன்னத காதலின்,கடைசி பேச்சு உள்ள வரை!

மேலும்

"உன் கூந்தல் நறுமணம் என் உயிர் வரை சென்று வீசுதே....." அழகிய வரிகள்....மனதை தொடும் கவிதை :) 04-Sep-2016 12:47 pm
நன்றி! சர்பான் உங்களின் வாழ்த்துக்கு! 02-Sep-2016 11:07 am
நல்ல கவி..வாழ்த்துக்கள் 02-Sep-2016 11:01 am
காரை அருண் - காரை அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2016 1:31 pm

பதின் பருவ சலனங்கள் யாவும்
பகல் பொழுது பனியாய் மறையும்
பார்த்திரா பாவை உன் நினைவால்!

கற்ப்பை பொதுவில் வைத்த
பாரதி வழி வந்த வித்து
முப்பது தாண்டியும் என்னில்
கற்பு நெறி காக்க வைக்கும்...
நீர் தேக்கும் அணையாய்
நெஞ்சம் தேக்கும் உன் நினைவு!

கூந்தல் கொஞ்சம் குறைவு
வாய் நீளம்
பல் சற்று எடுப்பு
படிப்பு அதிகம்
பணவசதியில்லை
நிறம் கம்மி

ஆயிரம் காரணம் அடுத்தவர்
உன்னை சாட
எனக்கோ அன்பென்னும்
ஒற்றைக் காரணம்
உன் சரணம் பாட!

மூன்று முடிச்சிட்டு
உன் கழுத்தில் நான்
அணிந்தது தாலியல்ல
தாய் தந்த என்
தேகத்தை தான்!

உன் சிரம் சுற்றி
உச்சி நெற்றியில்
என் கர

மேலும்

சிறப்பு,,,,,,, 22-Sep-2016 9:50 pm
அருமை... காதல் கொண்டால் குறைகள் மறைந்துவிடும்,! 22-Sep-2016 2:36 pm
நன்றிகள் பல நண்பா :) 04-Sep-2016 12:36 pm
மிக்க நன்றி சகோதரி :) 04-Sep-2016 12:35 pm
காரை அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2016 1:31 pm

பதின் பருவ சலனங்கள் யாவும்
பகல் பொழுது பனியாய் மறையும்
பார்த்திரா பாவை உன் நினைவால்!

கற்ப்பை பொதுவில் வைத்த
பாரதி வழி வந்த வித்து
முப்பது தாண்டியும் என்னில்
கற்பு நெறி காக்க வைக்கும்...
நீர் தேக்கும் அணையாய்
நெஞ்சம் தேக்கும் உன் நினைவு!

கூந்தல் கொஞ்சம் குறைவு
வாய் நீளம்
பல் சற்று எடுப்பு
படிப்பு அதிகம்
பணவசதியில்லை
நிறம் கம்மி

ஆயிரம் காரணம் அடுத்தவர்
உன்னை சாட
எனக்கோ அன்பென்னும்
ஒற்றைக் காரணம்
உன் சரணம் பாட!

மூன்று முடிச்சிட்டு
உன் கழுத்தில் நான்
அணிந்தது தாலியல்ல
தாய் தந்த என்
தேகத்தை தான்!

உன் சிரம் சுற்றி
உச்சி நெற்றியில்
என் கர

மேலும்

சிறப்பு,,,,,,, 22-Sep-2016 9:50 pm
அருமை... காதல் கொண்டால் குறைகள் மறைந்துவிடும்,! 22-Sep-2016 2:36 pm
நன்றிகள் பல நண்பா :) 04-Sep-2016 12:36 pm
மிக்க நன்றி சகோதரி :) 04-Sep-2016 12:35 pm
காரை அருண் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Sep-2016 11:22 am

ஞாயிறில் அமையா எந்த கொண்டாட்டமும்
கொண்டடத்தின் சுவாரசியம்
அற்று கிடக்கின்றன இன்று!

நண்பர்களின் கைப்பேசி வழி
திருமண அழைப்புகள் யாவற்றிலும்
'சண்டே' தான மச்சான்?
என்ற வினா தவறாமல் வினவப்படுதல்
இன்று சம்பிரதாய சடங்கு!
'ஆம்' என்ற பதிலில் உற்சாகம் அடையும் நீங்கள்
கொண்டாட்டத்தின் தாகம் கொண்டவர்!
'இல்லை' என்ற பதிலில் உற்சாகம் அடையும் நீங்களோ
'ஒரு காரணம் வேண்டும்' என்ற தாகம் கொண்டவர்!
இவ்வாறாக நண்பர்களின் திருமணங்கள்
கொண்டாட்டத்துடன்
நடந்தேறுகிறது ஞாயிறுகளில்!

இழுத்து கொண்டிருக்கும் அப்பச்சியின்
மரண செய்தி தாங்கி வந்த அலைபேசிக்கு
அழுத்தி முத்தமிட்டாள் இந்திய அ

மேலும்

மிக்க நன்றி சகோதரி :) 02-Sep-2016 12:21 pm
உண்மையான வரிகள்...தொடர்ந்தும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.... 01-Sep-2016 5:08 pm
ஊக்கமளித்தமைக்கு நன்றி :) 01-Sep-2016 3:13 pm
நன்றிகள் பல சகோ :) 01-Sep-2016 3:12 pm
காரை அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2016 11:22 am

ஞாயிறில் அமையா எந்த கொண்டாட்டமும்
கொண்டடத்தின் சுவாரசியம்
அற்று கிடக்கின்றன இன்று!

நண்பர்களின் கைப்பேசி வழி
திருமண அழைப்புகள் யாவற்றிலும்
'சண்டே' தான மச்சான்?
என்ற வினா தவறாமல் வினவப்படுதல்
இன்று சம்பிரதாய சடங்கு!
'ஆம்' என்ற பதிலில் உற்சாகம் அடையும் நீங்கள்
கொண்டாட்டத்தின் தாகம் கொண்டவர்!
'இல்லை' என்ற பதிலில் உற்சாகம் அடையும் நீங்களோ
'ஒரு காரணம் வேண்டும்' என்ற தாகம் கொண்டவர்!
இவ்வாறாக நண்பர்களின் திருமணங்கள்
கொண்டாட்டத்துடன்
நடந்தேறுகிறது ஞாயிறுகளில்!

இழுத்து கொண்டிருக்கும் அப்பச்சியின்
மரண செய்தி தாங்கி வந்த அலைபேசிக்கு
அழுத்தி முத்தமிட்டாள் இந்திய அ

மேலும்

மிக்க நன்றி சகோதரி :) 02-Sep-2016 12:21 pm
உண்மையான வரிகள்...தொடர்ந்தும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.... 01-Sep-2016 5:08 pm
ஊக்கமளித்தமைக்கு நன்றி :) 01-Sep-2016 3:13 pm
நன்றிகள் பல சகோ :) 01-Sep-2016 3:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
கௌதமன் தனலட்சுமி

கௌதமன் தனலட்சுமி

திருப்பூர் / சென்னை
பச்சைப்பனிமலர்

பச்சைப்பனிமலர்

திருகோணமலை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

கௌதமன் தனலட்சுமி

கௌதமன் தனலட்சுமி

திருப்பூர் / சென்னை
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே