ஞாயிறு போற்றதும்

ஞாயிறில் அமையா எந்த கொண்டாட்டமும்
கொண்டடத்தின் சுவாரசியம்
அற்று கிடக்கின்றன இன்று!

நண்பர்களின் கைப்பேசி வழி
திருமண அழைப்புகள் யாவற்றிலும்
'சண்டே' தான மச்சான்?
என்ற வினா தவறாமல் வினவப்படுதல்
இன்று சம்பிரதாய சடங்கு!
'ஆம்' என்ற பதிலில் உற்சாகம் அடையும் நீங்கள்
கொண்டாட்டத்தின் தாகம் கொண்டவர்!
'இல்லை' என்ற பதிலில் உற்சாகம் அடையும் நீங்களோ
'ஒரு காரணம் வேண்டும்' என்ற தாகம் கொண்டவர்!
இவ்வாறாக நண்பர்களின் திருமணங்கள்
கொண்டாட்டத்துடன்
நடந்தேறுகிறது ஞாயிறுகளில்!

இழுத்து கொண்டிருக்கும் அப்பச்சியின்
மரண செய்தி தாங்கி வந்த அலைபேசிக்கு
அழுத்தி முத்தமிட்டாள் இந்திய அமெரிக்க
கம்பெனியின் அடிமை பெண்ணொருத்தி!
அன்று நவீன அடிமையின்
விடுமுறை தினம் - ஞாயிறு!!

ஞாயிறுகளில் நடக்கும்
கொண்டாட்டமும்
ஞாயிறுகளில் நடக்கும்
துக்கமும்
அதி முக்கியத்துவம்
பெற்றுவிடுகின்றன எப்போதும்!!

எழுதியவர் : காரை அருண் (1-Sep-16, 11:22 am)
பார்வை : 121

மேலே