உயிர்வாழ உன்னுடம்பை ஓம்பு - நம் உரத்த சிந்தனை, ஆகஸ்டு, 2016 போட்டிக்கு அனுப்பிய இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்

கல்லா தவரேயா னாலுமவர் ஆக்கமும்
இல்லா தவரேயா னாலும்தான் – சொல்வேன்
செயிர்போன்ற காரிய மா(ம்)மதுத விர்த்து
உயிர்வாழ உன்னுடம்பை ஓம்பு! 1

பட்டம் பதவியே வந்தாலும் என்று(ம்)உன்
கட்டுக்குள் வைத்துவிடு உன்மனதை – கிட்டும்
செயிரன்ன கட்குடியைத் தொட்டிடாதே; நாளும்
உயிர்வாழ உன்னுடம்பை ஓம்பு! 2

பரிசு பெற்ற இரண்டு வெண்பாக்கள்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்;
புடம்போட்ட பொன்மொழிநீ போற்று; - திடமாய்
வயிறுமுட்ட ஏன்உணவு? வம்புநோய் பற்றும்;
உயிர்வாழ உன்னுடம்பை ஓம்பு! - பொன்னியின் செல்வன்

ஓயா துழைக்கவும் ஒவ்வொரு நாளிலும்
தேயா நிதியத்தைத் தேடவும் - தீயாய்ச்
செயலூக்கம் பெற்றவராய்ச் சோர்விலா தென்றும்
உயிர்வாழ உன்னுடம்பை ஓம்பு! - பு.கு.சுப்பிரமணியன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-16, 12:13 pm)
பார்வை : 72

மேலே