இப்படியும் ஒரு கனவு

தூக்கத்தில் ஒரு தூக்கம்
தூங்கும் போது தூங்குவது போல் கனவு
தூங்குகிறேன் நான் தூக்கத்திலும் தூங்குகிறேன்
என்ன அதிசயம் இப்படி ஒரு தூக்கம் காண
தூக்கத்தில் கனவு கண்டால் அந்த கனவு நம்மை
விழிப்படைய செய்துவிடும்
பிறகு உருண்டு புரண்டு படுத்தாலும்
தூக்கம் வராது
ஆயினும் தூக்கத்தில் தூங்குவது போல் கனவு கண்டால்
எப்படி விழிக்க முடியும்
எதிர் கால கனவுகளுடன் வாழ்பவர் எதனை பேர்
நல்ல வேலை கிடைக்க வேண்டும்
நல்ல கல்வி கிடைக்க வேண்டும்
நல்ல தொழில் அமைய வேண்டும்
வெற்றி கிடைக்க வேண்டும்
சன்மானம் கிடைக்க வேண்டும்
பொன் பொருள் சேர்க்க வேண்டும்
இப்படி எண்ணற்ற கனவுகள்
பெற்றவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக
கனவு காண்கிறார்கள்
பிள்ளைகள் தன எதிர்காலத்துக்காக கனவு காண வேண்டும்
அந்த கனவுகள் நனவாகும் போது
தூக்கத்தில் தூக்கம் வரும்
அந்த தூக்கமே சுகமானது
- கோவை உதயன் .