கவிதை 120 மதிப்பில்லா இப்பிறவி
![](https://eluthu.com/images/loading.gif)
பயணமில்லா பாதைகள்
குண்டும் குழியுமாய் மாறிவிடும்
செயல்களில்லா சிந்தனைகள்
உள்ளத்தை அரித்துவிடும்
குடியில்லா இல்லங்கள்
சிலந்திகள் வசப்படும்
தொடர்பில்லா உறவுகள்
காலத்தால் ஒதுங்கிவிடும்
ஆதரவில்லா மழலைகள்
தெருவிற்கே வந்துவிடும்
கவனிப்பில்லா குழந்தைகள்
தறுதலையாய் மாறிவிடும்
பேச்சில்லா மொழிகள்
நாளடைவில் அழிந்துவிடும்
பயனில்லா கருவிகள்
துருவாய் குலைந்துவிடும்
அன்பில்லா உள்ளங்கள்
வேதனையில் மூழ்கிவிடும்
துணையில்லா பெற்றோர்கள்
தளர்ந்துத்தான் போய்விடுவார்
உருவமில்லா வதந்திகள்
நிம்மதியை குலைத்துவிடும்
அர்த்தமற்ற கோபங்கள்
அமைதியினை கெடுத்துவிடும்
நியமில்லா வருமானம்
வேகமாய் அழிந்துவிடும்
நேர்மையில்லா பொறுப்புகளும்
பாதாளத்தில் தள்ளிவிடும்
பண்பில்லா இதயங்கள்
பிடிவாதத்தில் சிதைந்துவிடும்
நெறியில்லா வர்த்தகமும்
சீக்கிரமே படுத்துவிடும்
மதிப்பில்லா இப்பிறவி
புரிந்து நடந்தால் செழித்தோங்கும்
நோக்கமில்லா செய்யும் உதவி
எல்லோர்க்கும் நன்மை பயக்கும்