தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 7--முஹம்மத் ஸர்பான்

61.கறுப்புச் சட்டைக்காரனின் கண்கள் குருடானால்
கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையும்
சிரிக்கும் நோட்டில் அழுகின்ற நியாயத்தை காணலாம்

62.அழகான பூக்களின் பாரத்தை தாங்கி நிற்கும் வேர்கள்
தியாகத்தின் வேதத்தை மண்ணுக்குள் மெளனமாய் ஓதியது

63.கங்கையில் குளித்து மென்மையாய் சிரிப்பவனும்
மனதின் அழுக்குச் சட்டையை கழுவிக் கொள்ள முடியவில்லை

64.மனிதன் தோள்கள் வர்ணங்களால் மாறுபட்டாலும்
தரையில் விழுகின்ற நிழல்கள் என்றும் கருமை தான்

65.கனவினுள் சிந்தியும் சிதறாத சிந்தைகள்
நினைவில் மட்டும் அங்குமிங்கும் அலைந்து திரிகிறது.

66.குடிசைக்குள் எரிகின்ற குப்பின் விளக்கின் தீபமும்
ஏழையின் சிரிப்பில் நிலவை விட ஒரு படி அழகாய் தெரிகிறது.

67.நீர்வீழ்ச்சியின் இன்னிசையும் ஊமையை போல்
புதிரான வாழ்க்கையின் புரியாத பாடத்தை கற்றுத் தருகிறது.

68.சாலையை கடக்கும் மனிதனை பார்த்து
மேகத்தை கடக்க முயல்கிறது பறவைகள்

69.இரையை கொத்தி தின்று ஏப்பமிடும் இரைப்பை
பசியெனும் ஆயுதம் ஏந்தி போர்க்களம் வெல்கிறது.

70.கண்கள் இருந்தும் பார்வைகள் தெளிவில்லை
தாகம் வந்ததால் பலியாடாய் குவிகின்றோம்
கால்கள் இருந்தும் தவழ்ந்து செல்லத் தேம்பில்லை
உரிமை இருந்தும் சிறைகள் உடைக்க வீரமில்லை
---இப்படிக்கு கறுப்பின மக்களின் விடுதலை வாசகம்---

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Sep-16, 10:59 am)
பார்வை : 176

மேலே