என் உயிர் காதல் நீ யம்மா
இவள் வைரபூக்களின் கோலமா?
நிலவில் வசிக்கும் அன்னம்மா?
என் கையில் கிடைத்த தேன் கிண்ணமா?
என் உயிர் காதல் நீ யம்மா!
பார்க்க பார்க்க பரவசம் நிலவை போல் உன் முகம்,
கேட்க கேட்க சுவாரசியம் தித்திக்கும் உன் தமிழ்,
உன் காதின் மடல்களும் காதல் மொழி பேசுதே,
உன் கூந்தல் நறுமணம் என் உயிர் வரை சென்று வீசுதே,
நீ பூக்கும் புன்னகை பூக்கள் எல்லாம் என் நெஞ்சுக்குள் புதையுதடி பொக்கிஷமாய்,
உன் விரல் தொடும் சுகம் மட்டும் போதும் எனக்கு யுக யுகமாய்,
காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என் காதலை காதலிக்கிறேன்,
என் காதலியை காதலிக்கிறேன்,என் கடைசி மூச்சு உள்ள வரை அல்ல,
இவ்உலகின் உன்னத காதலின்,கடைசி பேச்சு உள்ள வரை!