எதார்த்தம்

முதல் சந்திப்பிலேயே
மனதை கரையவிட்டு
விடாமல் துரத்தி
பயந்து பயந்து பேசி
இரண்டாம் வார்த்தையில் காதல் சொல்லி
சிறகு முளைத்து
முளைத்த சிறகு உடைந்து
காத்திருந்து
காலம் கணிந்து
இணையத்தில் நட்பாகி
பின் இதயத்தில் அன்பாகி
பேசி, சிரித்து, அழுது, புலம்பி, நேசித்து,
வெறுத்து, பகிர்ந்து, மறந்து, மனித்து, கிசுகிசுத்து,
சிலாகித்து, கசிந்துருகி
" என் அப்பா அம்மாவுக்கு அப்றம் நீ தான்டா" என சொல்ல வைத்து
அவளையே நினைத்து
நினைவுகளிலேயே வாழ்ந்து
தூரம் கண்டு பதபதைத்து
பிரிவு தாளாமல்
"நாம எப்பவும் பிரிய மாட்டோம் "என
ஒருவருக்கொருவர்
ஆறுதல் சொல்லி
கண்ணீர் சிந்தி
ஆறத் தழுவி
உலகத்து அன்பை எல்லாம்
ஒட்டு மொத்தமாக பரிமாறிக் கொண்ட
உறவுகளில் பல
ஏனோ சுவடே தெரியாமல் காணாமல் போய்விடுகின்றன
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சிகளைப் போல!!!

எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன் (2-Sep-16, 11:00 am)
Tanglish : ethartham
பார்வை : 145

மேலே