காதல் சொல்ல

காதலை சொல்ல பயந்த
ஒரு கோழை நான்...

மனித சக்தியை மீறிய
சக்தி இந்த உலகத்தில்
கிடையாது... என்றிருந்தேன் நான்...

உன் மேல காதல்
கொள்ளும் வரை...
கல் தோன்றும் மண்
தோன்றும் முன்னமே
தோன்றியதோ காதல்...
இன்றுதான் காதல்
கொண்டேன் நான்...

வாழ்வில் எதிர் பாராத
விஷயங்கள் நடந்தால்
தடுமாறுவது இயல்பு...
தடுமாறினேன் நான்

புயல் வந்தா மழை
வரும்... எனக்குள் நீ
வந்தாய்... இதயத்தில்
அடை மழை...

உனக்கு கொடுத்த இதயத்தில்
உனை வைத்து பார்த்து
எனை தொலைத்தேன்...

எழுதியவர் : பவநி (2-Sep-16, 11:50 am)
Tanglish : kaadhal solla
பார்வை : 90

மேலே