என் தியாக பெண்ணே
என் வருகை கனவை வளர்த்தவளே,
என் இதயம் துடிக்கும் முதல் நிமிடத்திலே
என் உயிர் காக்க
உன் கருவறையில்
இடம் கொடுத்தவளே,
உன் மூச்சில் நான் சுவாசித்தேன்,
உன் உணவில் நான் புசித்தேன்,
உன் உயிர் வலிக்க ,என் உயிரை வளர்த்தாய்,
அதனால் தான் நீ தாய் !
பல நாள் உறக்கம் உன் கண்கள் பார்க்கவில்லை
நீ என் மீது கொண்ட இரக்கம் தோற்கவில்லை
சிரமம் கொண்டு சுமந்தாய்
உருவம் எனக்கு கொடுத்தாய்
வலிமை இன்றி தவித்தாய்
வலியும் சுகம் என நினைத்தாய்
இதனால் தான் நீ தாய்!!!
உன்னுள்ளே இருந்த என்னை
இவ்உலகிற்கு கொடுத்தாய்
என் முகம் பார்த்து நீ மகிழ்ந்தாய்,
என் அழுகையும் உன்னை ஆனந்தபடுத்தியது அன்று தானே,
என் தியாக பெண்ணே!
என் கண்நீர்ரிலும் ,என் சிரிப்பிலும்,
என் பசியிலும் என் உறக்கத்திலும்,
என் பேச்சிலும், என் நடையிலும்,
என் கவலையிலும்,என் நிம்மதியிலும்
என்னோடு இருந்தாயே!
தாயே!
அன்பை தெளித்து,பாசம் உரம் போட்டு
வளரும் உயிரை தோலுக்கு தோலாய் வளர்த்து
விளையும் வேளையிலே அறுவடை பலனை
பார்க்காமல் போனாயோ?
நி செய்ததற்கு நன்றி சொல்லவும் நேரம் இல்லையே எனக்கு
என் தூக்கமும் உன் மடி பார்த்தது குறைவு தானே!
என் அன்னையே!
மீண்டும் உன் மடியில் ஒருமுறையாவது உறங்கனும்
உயிர் பெற்று எழு தாயே!!!!!!