தாய்க்கு ஒரு தாலாட்டு
தாய்க்கு ஒரு தாலாட்டு
*அஅஅஅஅஅஅஅஅஅஅ*
(தனன்னனன்னானா
தனன்னனன்னானா
தனன்னனன்னானா
தானானே)
வசந்தங்கள் வீசும்
வான் மழை மேகம்
என்னுயிர் என்றும்
நீ தானே...
சந்தங்கள் பாடும்
சரிகமபதநி
என் மனம் தேடும்
தேடல் நீ...
துக்கங்கள் வேண்டாம்
தூங்கு நீ தாயே
தூண் போல் என்றும்
நான் இருப்பேன்...
மாதங்கள் ஓடும்
நாட்களும் நகரும்
நம் பந்தம் என்றும்
மாறாதே...
புல்வெளி படரும்
பூக்களும் பிறக்கும்
நம்பிக்கை வைத்திடு
என் தாயே...
காயங்கள் ஆறும்
கண்ணீரும் மறையும்
கண்மணி கண்ணுறங்கு
என் மீதே...
உயிர்கள் பேசும்
உன்னிடம் அறிந்தேன்
உயிரே எந்தன்
நற்றாயே...
தெய்வங்கள் யாவும்
கோவிலில் வாழும்
என்றால் தவறென்பேன்
என் தாயே...
தாய் தான் தெய்வம்
தாய் தான் யாவும்
என் தாய்க்குத் தான்
தாலேலோ...
~ தாயே உன்னில் வாழும் உன் சேய்
பிரபாவதி விஜயலட்சுமி வீரமுத்து