தாய்
பத்துத் திங்கள் பரிவுடன் சுமந்து
பத்தியம் காக்கும் பத்தினி யிவளே !
தத்தித் தவழும் தங்க மகனை
நித்தமு மன்பால் நிறைப்பவ ளிவளே !
பொத்தி வளர்த்துப் புதுமைகள் புகட்டி
வித்தக னாக்கும் விமலையு மிவளே !
முத்தமிழ் புகட்டி முத்தொளிர் பிள்ளையைச்
சொத்தாய் நினைத்துச் சுகம்பெறு வாளே !