துயர்நீக்க வாரீரோ அம்மா கவிதை

துயர்நீக்க வாரீரோ ?(அம்மா கவிதை)

ஆசையாய் தூளிகட்டி
அழகாய் பாட்டிசைத்து
நேசமாய் வளர்த்த பிள்ளை
நீசமாய் ஏசினாலும்
பாசமாய் இருப்பவளே
பெற்றெடுத்த தாயவளே!

காசைத்தான் பார்ப்பதில்லை
கண்களிலே கருணைதானே!
வேசமும் தெரியாது
வெள்ளந்தி உள்ளந்தனில்
வெளுத்த தெலாம் பாலென்பாள்!
பெற்றெடுத்த தாயவளே!

அழுகின்ற குழந்தையின்
அதற்கான தேவையை
அழகாய் புரிந்தவள்தான்
அவளும்தான் அழுகின்றாள்!
பெற்றெடுத்த தாயவளே!

யார்தான் புரிந்தனரோ ?
எவர்தான் அறிந்தனரோ ?
பெற்றெடுத்த தாயவளின்
துயர்நீக்க வாரீரோ !


----- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (7-Sep-16, 8:52 pm)
பார்வை : 171

மேலே