தனிமையில் அழுகை

கண்ணில் இருந்து
வழியும் கண்ணீரை
துடைத்து விடவும்
கைகள் இல்லை

துக்கி இருத்தவும்
ஒருவர் இல்லை

அனைவருக்கும்
தைரியம் சொல்லும்
என் மனம் ,
தனிமையில்
கோழையாகி நிற்கிறது!

வாய்விட்டு அழுதிட
ஆசை இருந்தும்
தோள் சாய்ந்து
அழுதிட ஒரு
உறவு இல்லை
எனக்கென்று.......

மாற்றங்கள் பல
கண்டும்
பழைய நினைவுகளை
மறந்திட,மனம்
கட்டாயமாக
மறுக்கிறது .....

உள்ளம் கோடி
துண்டுகளாக
சிதறியும்,

இனி
அழுது வழிந்திட
கண்ணிர் இல்லை
என்ற நிலையில்
சிதறிய துண்டுகளை
சேர்த்து
சிரிக்க தொடக்கி
விடுகிறது

அனைவரும் தூங்கும்
இரவு நேரம்
போர்வையை முகத்தியில்
முடிகொண்டு
கண்ணிர் மட்டும்
எட்டி பார்க்கிறது
சப்த்தம் இல்லாமல்

சப்த்தம் இல்லாமல்
அழும் பொழுதில்
எல்லாம்
அழும் காரணத்தை
விட,எப்படி
அழுகிறோமே
என்று என்னும்
பொழுதில் தான்

இன்னும் வலிக்கிறது
இன்னும் அழுகை
போத்திக்கொண்டு
வருகிறது

எப்பொழுது
தூங்கினேன்
என்று நினைவு
இல்ல்லாமல்
அழுது தூங்கிய
நாள்களும் உண்டு

என் தனிமையில் அழுகை....................

எழுதியவர் : திவ்யா (10-Mar-11, 9:30 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : thanimayil azhukai
பார்வை : 3394

மேலே