நட்பொன்று காதலானது

கவிதை சூழல்: ஒரு பெண்ணிடம் நட்பாக பழகிய ஆண், நாளடைவில் அது காதலாக மாறிய உணர்வுகளின் க(வி)தை.

என் இனியவளே....!
என் வாழ்க்கை பரீட்சையில்
மதிப்பெண் குறைய
காரணமாக இருந்த
என் இனிய காதல் நாயகியே...!
என்னருகில் நீயிருந்ததாலோ என்னவோ
உன்னை கண்டும் காதலிக்காதிருந்தது
என் இதயம்...

என்னை விட்டு கல்வி கற்க
நீ வேறிடம் சென்றாய் - அப்பொழுதும்
கடுகளவு கூட தோன்றவில்லை
உன்மீது என் காதல் எண்ணம்.
கல்வி நாட்களை கழித்தப்பின்
கடமையால் பணிக்கு,
சென்றபின் தோன்றியதடி - என்
நினைவலையில் நீயிருப்பது.

ஒவ்வொரு நாள் பிரிவிலும்
தெரியவில்லை உன் உருவம்.
ஓரிரு மாதங்கள் கழித்தே உணர்ந்தேன்
உன் மீது நான் காதல் வயப்பட்டதை.
அருகில் இருந்ததால் உன்னை
எண்ணாத என் மனம் - பிறகு
உன்னிடம் நான் பேசிய நாட்களை
தேட ஆரம்பித்தது.

பணியிலிருந்து திரும்பிய ஓர்நாள்
உன்னுடன் நான் பேசகையிலே
உணர்ந்தேன் என்னை கவர்ந்த
சிந்தனைகள் பல
உன்னையும் கவரும் என்பதை

உன்னை பிரியும் சில மாதங்களில் என்னை
பணியிலும் படிப்பிலும் கவனமின்றி
சூறாவளியாய் திக்கின்றி சுழல வைத்தது
உன் மேல் நான் கொண்ட காதல்

புத்தகபிரியையான உனக்காக
புத்தகங்கள் பல வாங்கி பரிசளித்தேன்
அதில் என் காதலை தெரியப்படுத எண்ணினேன்.
ஆனால் நீ மறுத்துவிட்டால் - சிதறடிக்கப்படுவது
ஒரு உண்மையான அன்புள்ளதையன்றோ...!

உன்னிடம் என் காதலை பல
வழிகளில் தெரியப்படுத்த எண்ணினேன் - நீ
புரிந்து கொள்வாயென்றும் எண்ணினேன்
ஆனால் மாது நீயோ
இறுதிவரை புதிரானாய்....

சில நொடிகளே பேசிய நாம் - பிறகு
போனில் பல மணி நேரமாகியது நம் உரை
உன்னிடம் பேசாத சில நாட்கள்
உறக்கமற்ற சிவராத்திரியானது உண்மையே!

உன்னை எண்ணி - பல காதல் கோட்டைகள்
மனதில் கட்டினேன் உன்னை நான்
கணவில் கூட்டி செல்லாத இடம்
பாவம் செய்த இடமன்றோ...!

ஓர்நாள் என் கரம் உன்கரத்தை தொட்டபோது;
பின் உன்னுடன் எடுத்த புகைப்படம்
உன்னுடன் சென்ற ஐஸ்பார்
அப்பப்பா....
எத்தனை பரவசம் அதில்.....
எப்படி தெரியும் அது உனக்கு....!

ஓர் நாள் திருவிழாவில்
உன் பெற்றோர் சகோதரி
உடனிருக்க உன் வீட்டில்
நான் பூசிய மஞ்சளால்
உறக்கமற்று நான் கஷ்டப்பட்டது
உனக்கெப்படி தெரியும்............. !

இவ்வாறு என் நினைவில் நீயிருப்பதால்
உன்னிடம் நட்பாக பழக இயலாமல் தவிக்கிறது
என்னுள்ளம் - இதை நீயறிவாய என தெரியவில்லை
இவ்வாறு கடந்து செல்லும் என்
வாழ்க்கையில் இனியென்னவோ ?!.............

தொடரும் நினைவுகளுடன்
உங்கள் மணிசந்திரன்.......................

எழுதியவர் : மணிசந்திரன் (23-Jun-14, 12:10 pm)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே