பருவமழையே வருக வருக -நாகூர் லெத்தீப்

வானத்தில்
திருவிழா குடை
தேடும்
மேகங்கள்.......!

மழைத்துளிகளின்
ரம்மியம்
மனதிற்கு
நீங்காத பரவசம்........!

தொடருமே
இடி முழக்கம்
சிறுவர்களுக்கு சிறிய
அச்சம்......!

வெள்ளத்தை
அள்ளி வரும்
மழைத்துளிகள்
தெருவோரம்......!

வீடுகளின்
முற்றத்தில் மழை
குழியல்
ஆனந்தமே......!

தண்ணீர் கப்பல்
எங்களின்
அழகான வேடிக்கை
வீதியிலே........!

அடைமழை
கிடைப்பது
பள்ளிக்கு விடுமுறை........!

ஆனந்தம்
பருவமழை வரவினால்
பேரின்பம்.......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (23-Jun-14, 11:51 am)
பார்வை : 59

மேலே