சுவடுகள்
நடக்கும் பொழுது
ஓவியம் வரைகிறாய்!
அலைகள் தொட்டு பார்க்க
ஆசை கொள்ளும்..
வெயிலிலும் காயும்
உன் வெளிறிய
பாதத்தடங்கள் -பாவம் அவை
கடற்கரையில் மட்டும் அல்ல
மனதிலும் வடித்துவிட்டாய்
உன் பாதச்சுவடை !!