உண்மைக் காதல்
தேன் பூவுக்கு வீண் என்று
தட்டிக்கழிப்போர் உண்டா?
இனிக்கும் அமுதமாக
என்னைச் சுவைக்கலாம்
வாசம் பூவுக்கு நாசம் என்று
விட்டுவிடுவோர் உண்டா?
பாசத்தோடு நேசமாக
மணக்க நான் தயார்
வண்ணம் பூவுக்கு சன்னம் என்று
துளைத்தெடுப்போர் உண்டா?
திண்ணமாக எண்ணம்வைக்க
நான் தயார்
வாச வண்ணத் தேனில்
காயொன்றும் கனிவதில்லை
நேச எண்ணப் பெண்ணில்
வாழ்வென்றும் கசப்பதில்லை
உனக்குத் தேவை காய்ப்பதுதானே