கார்குழல் இனிது
கதவோரம் நான் நிற்க
கார் மேகக் காட்சி !
மிதமான குளிர் காற்று
என் முகம் மோதியாச்சு!
மழை ஏதும் வரவில்லை
மணியும் பலவாச்சு !
மண்வாசம் அதுவல்ல
மலர் வாசமும் அதுவல்ல
என் மனம் குலம்பளாச்சு !
அலையலையாய் பாய்கிறதே
கடலென்றால்
அதுவும் பொய்யாச்சு !
இரவோடு ஒப்பிட்டால்
அழகில்
அதுவும் தோற்றுப் போயாச்சு !
கருநாகம் என்றெண்ணி சிலநேரம்
என் மனம் பதரளாச்சு !
கட்டி எனை ஈர்க்க உனக்கு
கயிறென அதுவே ஆச்சு !
யாதென்று அறியாமல் என்
அறிவெங்கே போச்சு !
நின் முகம் பார்த்தபின்புதானடி
குழலென்று ஆச்சு !
ஒப்பிட்டு நான் கூற
என் வார்த்தை குறைந்து போச்சு !
அடிமையடி இவனுலகம்
உன் கார்கூந்தளுக்கு
என் காதல்தானே சாட்சி !