நட்பு-உயிர்எழுத்து

அ லைகளோடு பிரியாத ஓசையின் சிறப்பு நட்பு.
ஆ வினோடு குடியிருக்கும் தாய்மை குணம் நட்பு.
இ சைக்கூட்டில் உறவாடும் காணக்குயில் நட்பு.
ஈ ன்றெடுத்த இன்பங்களின் சந்திப்பு நட்பு.
உ யிர்த்தெழம் விதையின் வீரியம் நட்பு.
ஊ ஞ்சல் உணர்த்தும் தாலாட்டு நட்பு.
எ ண்ணங்களில் வண்ணங்கள் சேர்க்கும் ஓவியம் நட்பு.
ஏ ணியென படிபடியாய் முன்னேற்றும் நட்பு.
ஐ ம்பூதங்களின் ஆற்றல் நட்பு.
ஒ ற்றுமையே வலிமையென ஓதிடும் நட்பு.
ஓ வியம் தழுவிய கலையது நட்பு.
ஔ வை பாடி மகிழ்ந்த பாடல் நட்பு.

எழுதியவர் : க.இளம்பரிதி (24-Jun-14, 8:00 pm)
பார்வை : 226

மேலே