யார் இந்த பகலவன்

யார் இந்த பகலவன்
பகலில் மட்டுமல்ல
இரவினிலும்
என்னைச் சுடுபவன் !
யார் இந்த பகலவன்
நினைவில் மட்டுமல்ல
கனவினிலும்
என்னைச் சுடுபவன் !
யார் இந்த பகலவன்
வார்த்தையால் மட்டுமல்ல
மௌனத்தாலும்
என்னைச் சுடுபவன் !
யார் இந்த பகலவன்
கூடலால் மட்டுமல்ல
ஊடலாலும்
என்னைச் சுடுபவன் !
யார் இந்த பகலவன்
பார்வையால் மட்டுமல்ல
பார்க்காமலும்
என்னைச் சுடுபவன் !
யார் இந்த பகலவன்
மோதலால் மட்டுமல்ல
காதலாலும்
என்னைச் சுடுபவன் !
யார் இந்த பகலவன்
வெறுமையாய் இருந்த
என்னுள்
முழுமையாய் நுழைந்தவன் ...
யார் இந்த பகலவன்
பட்டமரமாய் இருந்த
என்னுள்
பசுமையாய் பரந்தவன் ...
யார் இந்த பகலவன்
என்னுள் 'நுழைந்து '
என்னுள் 'பரந்து '
என்னுள் 'பதுங்கியும் '
கொண்டவன் ?